திட்டமிட்டபடி கொழும்பு வாழ் மாவனல்லைசஹிரா பழைய மாணவர்களை இலக்குவைத்து ஏற்பாடு செய்யப் பட்ட Family Get Together நிகழ்வு, கொள்ளுப்பிட்டி ரன்முத்து ஹோட்டலில் இன்று
பகல் நடைபெற்று இனிதே நிறைவடைந்தது.சுமார் 150 வரையான மாவனல்லை சஹிரா பழைய மாணவர்கள் மேற்படி நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர். (200 வரையான நுழைவுச் சீட்டுக்கள் விற்பனை செய்யப்பட்டிருந்ததாம்.)
வெவ்வேறு காலப் பகுதிகளில் சஹிராக் கல்லூரியில் கல்வி பயின்ற, பல்வேறுவயதுகளிலுள்ள, வித்தியாசமான தராதரங்களையுடைய பழைய மாணவர்கள் ஒன்றாகக் கலந்துகொண்ட ஒரு நிகழ்வாக இது அமைந்திருந்தது. சில Batch களில் இருந்து 07 பேர் வரையானவர்களும், வேறு சில Batch களில் இருந்து ஒருவர், இருவர் கூட கலந்து கொண்டுள்ளனர்.
மேற்படி நிகழ்விற்காக, மிகவும் ரம்மியமான சூழலில், அனைவரும் நட்போடு கூடி திருப்தியோடு கலைந்தனர். மேற்படி நிகழ்வு குறித்து கலந்து கொண்டவர்களிடம் திருப்தி காணப் பட்டது.
பகல் போசனத்தின் பொழுது, குறிப்பிடத் தக்க ஒரு முன்மாதிரி அம்சமாக, யூத / இஸ்ரவேலிய நிறுவனங்களுடன் தொடர்புடைய பெப்சி, கொககோலா, ஸ்ப்ரைட் என்பவை பரிமாறப் படாமல், உள்நாட்டுத் தயாரிப்பான யானை மார்க் மென்பானங்களே பரிமாறப் பட்டன.
This news publish with responsible news we get from participant.