Friday, May 3, 2013

மாவனல்லை அரசியல்வாதியின் நடவடிக்கையால் கனேதன்ன குடும்பம் பிரியுமா?

"கனேதன்ன பெண் கணவனின் சொத்துக்களுடன் பிறந்த வீட்டுக்கு எஸ்கேப்" என்ற தலைப்பில் ஒரு செய்தியை வெளியிட்டு இருந்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம்.






பொலிஸ் கேஸ்களில் குறிப்பிட்ட கனேதன்ன குடும்பத்திற்கு உதவி செய்ய சென்ற மாவனல்லையின் ஜனரஞ்சக அரசியல் வாதியின் நடவடிக்கைகள் காரணமாக இப்பொழுது,  குடும்பம் முற்றாக பிரியும் நிலை ஏற்பட்டுள்ளதாக சில தூரத்து உறவினர்கள் எமது செய்தி சேவைக்கு கவலையுடன் தெரிவித்து உள்ளனர்.


"கனேதன்ன பெண் கணவனின் சொத்துக்களுடன் பிறந்த வீட்டுக்கு எஸ்கேப்" என்ற செய்தி தொடர்பில் பல பேர் எமக்கு தனிப்பட்ட மெயில் மூலமும், வேறு வழிகளிலும் ஆலோசனை சொன்னார்கள்.  "இந்த செய்தி காரணமாக குடும்பம் நிரந்தரமாக பிரிந்து விட சந்தர்ப்பம் ஏற்பட்டு விடும், ஆகவே செய்தியை நீக்கி விடுங்கள், என்ன நடக்கின்றது என்பதை பொறுத்துப் பார்த்து, அதன் பின்னர் தீர்மானிக்கவும்" இதுதான் எங்களுக்கு சொல்லப்பட்ட அனைத்து ஆலோசனைகளினதும் சாராம்சம் ஆகும்.


ஆகவே நாம் செய்தியை தற்காலிகமாக மறைத்து உள்ளோம்.


இந்த நிலைமையில், புதிதாக சில தகவல்கள் கிடைத்த வண்ணம் உள்ளன. அவற்றை வழங்கியவர்களில் சிலர், இந்த கணவனும் மனைவியும் மீண்டும் சேர்ந்து நல்லபடியாக வாழ வேண்டும் என்று விரும்பும் தூரத்து உறவினர்கள் ஆவார்கள்.


மேற்படி பிரச்சினை ஒரு தனிப் பிரச்சினை அல்ல என்றும், கனேதன்ன மற்றும் கம்பளை ஆகிய இரண்டு குடும்பங்களுமே பெறுமதியான சொத்துக்கள் உள்ள நிலையில், சொத்துக்கள், பணக் கொடுக்கல் வாங்கல்கள், வாய்த்தர்க்கங்கள், கோள் சொல்லுதல், ஏத்தி விடுதல், மைத்துனர்களுக்கு இடையில் நடைபெற்ற கைகலப்புகள், கொடுக்கல் வாங்கல்கள் காரணமாக தாக்கப் பட்டமை,  என்று பல பிரச்சினைகளின் தொடராக,  தற்பொழுது சொத்து விடயத்தை மையமாக வைத்து இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.எனினும் இதல்லாத வேறு காரணங்களோ, அல்லது வேறு நபர்களின் ஈடுபாடுகளோ இருக்கவும் வாய்ப்புக்கள் உள்ளன. என்றாலும் எமக்கு இதுவரை அத்தகைய தகவல்கள் வரவில்லை.


தற்பொழுது மாவனல்லையின் ஜனரஞ்சக அரசியல் வாதி, கனேதன்ன குடும்பத்திற்கு உதவி செய்வதற்காக இந்த விடயத்தில் தலையிட்டு, பொலிசாரின் மூலம் கணவனிற்கு சில நிர்ப்பந்தங்களை ஏற்படுத்துவதாக தூரத்து உறவினர்கள் தெரிவித்து உள்ளனர்.


குறித்த கனேதன்ன குடும்பமும், மாவனல்லையின் ஜனரஞ்சக அரசியல் வாதியும் ஒரே இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்றும் சொல்கிறார்கள்.

பெண்ணின் சார்பில் ( கனேதன்ன குடும்பம் சார்பில் ) உதவி செய்வதற்காக அரசியல்வாதி தலையிட்டாலும், அதன் விளைவுகள் என்ன என்று தூரத்து உறவினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்?


மாவனல்லை அரசியல்வாதி, நீதமாக நடந்து, கனேதன்ன மற்றும் கம்பளை ஆகிய இரண்டு தரப்பையும் நேரில் சந்தித்து சமாதானமாக விடயத்தை பேசி முடித்து, குடும்பம் மீண்டும் இணைவதற்கு உதவி செய்ய வேண்டும், அதுதான் சரியானது என்று உறவினர்கள் தெரிவித்து உள்ளனர்.

அதனை விட்டு விட்டு, அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி, பொலிசுக்கு கோல் பண்ணுவது, கணவனும், மனைவியும் நிரந்தரமாக பிரியவே வழி செய்யும் என்று கவலை தெரிவித்து உள்ளனர்.


உங்களது உதவி நடவடிக்கைகள் ஒரு குடும்பத்தை பாதுகாக்க உதவ வேண்டுமே வேண்டுமே தவிர, ஒருபொழுதும் குடும்பத்தை  பிரிக்க உதவக் கூடாது என்று தூரத்து உறவினர்கள் Mawanella News மூலம் மாவனல்லை அரசியல் வாதியிடம் கேட்டுக் கொள்கின்றனர்.



மாவனல்லை அரசியல்வாதி யார் என்று நாங்கள் சொல்லித்தான் நீங்கள் தெரிய வேண்டும் என்றில்லை.




முக்கிய குறிப்பு : மேற்படி செய்திகள் எமது நிருபர்களால் சேகரிக்கப் பட்டவை அல்ல. ஆகவே இவற்றில் ஏதாவது மாற்றுக் கருத்துக்கள், விளக்கங்கள் இருந்தால் உரியவர்களோ, சம்மந்தப் பட்டவர்களோ, அரசியல்வாதியோ அவற்றை எமக்குத் தெரிவித்தால், அவற்றை பிரசுரிக்க நாம் தயாராக உள்ளோம். mawanellanews@live.com

நிர்வாகம் 
மாவனல்லை செய்திகள்






No comments:

Post a Comment

Popular Posts