எதிர்வரும் 12 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை கொழும்பு ரண்முத்து (கொள்ளுப்பிட்டி) நட்சத்திர ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கொழும்பு சஹிரியன்ஸ் குடும்ப ஒன்று கூடல் குறித்த அறிவிப்பு
தொடர்பான செய்தியை ஏப்ரல் 25 அன்று வெளியிட்டு இருந்தோம்.
அதனைத் தோடர்ந்து, சிஹான் என்பவர் மேற்படி ஒன்றுகூடல் தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள், சந்தேகங்கள், கேள்விகளை முன்வைத்து எமக்கு அனுப்பியிருந்த மெயிலை "மாவனல்லை சஹிரா கொழும்பு OBA "குடும்ப" ஒன்றுகூடல் யாரின் தேவைக்காக?" என்ற தலைப்பில், ஏப்ரல் 26 அன்று வெளியிட்டு இருந்தோம்.
சிஹானின் விமர்சனங்கள் குறித்து உரியவர்கள் (சஹிரா OBA, சஹிரா OBA கொழும்பு கிளை அல்லது ஏற்பாட்டாளர்கள்) பதிலளித்தால் அதனையும் பிரசுரிக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்து இருந்தோம். எனினும் இன்று வரை, எத்தகைய உத்தியோக பூர்வ பதில்களும் வராத நிலையில், மேற்படி விடயம் தொடர்பில் Zahira Road Zahirians என்பவர்களிடமிருந்து மெயில் ஒன்று கிடைக்கப் பெற்றுள்ளது. அதனை கீழே தருகின்றோம்.
=====================================================================
Attn சஹிராக் கல்லூரி : பழைய மாணவர்கள், ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், பெற்றோர்கள், நலன் விரும்பிகள் மற்றும் OBA நிர்வாக அங்கத்தவர்கள் கவனத்திற்கு,
அஸ்ஸலாமு அலைக்கும்.
கொழும்பில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ள குடும்ப ஒன்றுகூடல் தேவையா என்ற கேள்வி எழுப்பப் படும் இன்றைய சூழலில், கொழும்பு ஒன்றுகூடல் தொடர்பாக பகிரங்கமாக விமர்சனம் ஒன்றை ஒரு பழைய மாணவர் ஒருவர் முன்வைத்துள்ள நிலையில், அது குறித்து முறையாக பதிலளிக்க முடியாத நிலையில் சஹிராக் கல்லூரி OBA காணப்படுவது கண்டிக்கத்தகக் ஒன்றாகும்.
மேற்படி குடும்ப ஒன்றுகூடல் நிகழ்விற்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்ற வாறான நழுவல் பதிலை சொல்லி தப்பமுடியாத படிக்கு, தொலைபேசி இலக்கமும், மாவனல்லை சஹிராக் கல்லூரி பழைய மாணவர்கள் சங்கத்தின் உத்தியோகபூர்வ மின்னஞ்சல் ( e mail ) உம் வழங்கப்பட்டுள்ளன.
மாவனல்லை சஹிராக் கல்லூரி OBA என்பது, பகலிலே கூலி வேலை செய்துவிட்டு, இரவிலே வெற்றிலை சப்பிக்கொண்டு வீதியோரம் உட்கார்ந்து டாம் இழுக்கும் படிக்காத பாமரர்களின் அமைப்பு அல்ல. சட்டத்தரணிகள், கல்விமான்கள் என்று கற்றறிந்தவர்களைக் கொண்ட ஒரு அமைப்பு என்பதனை அனைவரும் அறிவார்கள். தலைவர் தலமையிலான ஒரு நிர்வாகக் கமிட்டி, அதில் செயலாளர், உப செயலாளர்கள் என்று பதவிநிலை அங்கத்தவர்கள் உள்ள நிலையில், தமது செயற்பாடு ஒன்று குறித்து பகிரங்கமாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டிற்கு, சந்தர்ப்பம் வழங்கப்பட்டும் பதிலளிக்கவில்லை என்றால், அது மாவனல்லை சஹிராக் கல்லூரி OBA யின் பொறுப்பற்ற, பொடுபோக்குத் தனத்தையே வெளிக்காட்டுகின்றது, இது வன்மையாகக் கண்டிக்கத்தக்க விடயமாகும்.
"நீ சொல்வதைச் சொல், எங்களுக்கு தேவையானதைத்தான் நாங்கள் செய்வோம்" என்ற ரீதியில் செயல்பட முயல்வது எந்த ஒரு அமைப்புக்கும் ஆரோக்கியமானதாக அமையாது.
இங்கே எடுத்தக்கொண்ட விடயத்தைத் தவிர வேறு விடயங்களைப் பற்றிப் பேசுவது தற்பொழுது தேவையற்றது என்பதால், OBA குறித்த ஏனைய விடயங்களை இந்த சந்தர்பபத்தில் பேசுவது தேவையற்றது.
குடும்ப ஒன்றுகூடல் குறித்த இன்னொரு பதிவில் மீண்டும் விரைவில் சந்திப்போம், இன்ஷா அல்லாஹ்.
Zahira Road Zahirians
மாவனல்லை
குறிப்பு : மேற்படி விடயம் தொடர்பில் சஹிரா OBA விளக்கமளித்தால், அதனை பிரசுரிக்க நாம் தயாராகவே உள்ளோம். mawanellanews@live.com
நிர்வாகம்
மாவனல்லை செய்திகள்

No comments:
Post a Comment