Friday, April 26, 2013

பாய்ந்து போன பெரிய இடத்துப் பிள்ளை, மறைக்கப்பட்ட உண்மை

உண்மையோ, பொய்யோ, எப்படி இருந்தாலும் சில
செய்திகள் ஊர் முழுவதும் நாறும், கேட்கப் பார்க்க ஆளில்லாமல். ஆனால் இன்னும் சில விஷயங்கள் உண்மையாக இருந்தாலும் மூடி மறைக்கப் பட்டு விடும், அது பெரிய இடத்து விஷயங்கள்...

                                                     

ஊரில் செல்வாக்கு இல்லாதவன், காசில்லாதவன் வீட்டு விடயங்கள் எல்லாம் ஊர் முழுவதும் பேசப்படும், பள்ளியிலும் விசாரிக்கப்படும். பிறகு 5000 ரூபாய் வாங்கிக்கொண்டு மன்னிப்பு வழங்கப்படும்.


பணக்காரன், செல்வாக்கு உள்ளவன் வீட்டு விடயங்கள் எல்லாம் மூடி மறைக்கப்படும். அதைப் பற்றி பேசினால், அது புறம், புறம் பேசுவது பெரிய பாவம் என்றெல்லாம் பயான் பண்ணி மூடி மறைக்கப் படும்.இப்படிப்பட்ட விடயங்களை மூடி மறைக்க வெள்ளிக்கிழமை  ஜும்மா கூட நடைபெறும்.


பணக்காரன், செல்வாக்கானவன் வீட்டு விடயங்களைப் பற்றி பேசினால் புறம், ஏழை வீட்டு விடயங்களை பேசினால், அது முஸ்லிம் சமூகத்தை திருத்துவதற்கான இஸ்லாமிய நெறிமுறை. இதுதான் தற்பொழுது மாவனல்லையில் எழுதப்படாத சட்டம்.


பெலிகம்மன மாவான ஏரியாவை சேர்ந்த பெரிய வீட்டு கடப்பிலிக் காவாலிப் பிள்ளை ஒன்று மாறாவை பகுதியைச் சேர்ந்த காதல் இளவரசியுடன் உல்லாசம் அனுபவிப்பதற்காக தனிப்பட்ட வாகனத்தில் பொடிகார்ட் உடன் சென்றுகொண்டிருக்கும் பொழுது கையும் மெய்யுமாக பிடிபட்டுள்ளனர்.


இது நடந்து பல நாட்கள் கழிந்து விட்டாலும், இந்த கள்ளக் காதல் ஜோடியை பிடித்தவர்கள் கூட விடயத்தை மூடி மறைத்து விட்டனர். பள்ளிவாசலும் இந்த விடயத்தை பற்றி விசாரணைக்கு எடுக்கவே இல்லை.


மன்மத ராசாவும்,  மன்மத ராணியும் ஒன்றுமே நடக்காதது போல தங்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளனர்.


இந்த விடயம் வெளியில் வராமல் மூடி மறைக்கப்பட்டது எப்படி என்று ஆராய்ந்ததில், பெரிய இடத்து விடயம் என்று மூடி மறைத்து விட்டார்கள் என்று அறிய முடிகின்றது.


மேற்படி மன்மதராசாவின் நானா ஒரு வைத்தியரும், புதிதாக பெரிய பள்ளி போர்டுக்கு தெரிவு செய்யப் பட்ட ஒருவர் என்றும் அறிய முய்டிகின்றது.


இவர்கள் பாய்ந்து போனதை விடவும், இந்த விடயத்தை மூடி மறைத்து, விசாரணை இல்லாமல் கேஸை இல்லாமல் செய்தது மிகவும் கண்டிக்கத் தக்கது.


இதன் காரணமாக ஊரில் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற வேறுபாடுகள் ஏற்பட வழி பிறக்கின்றது.



No comments:

Post a Comment

Popular Posts