Wednesday, May 1, 2013

சஹிரா கல்லூரி ஆசிரியர்களின் காதல் கூத்துக்கள் அதிகரிப்பு

சஹிரா கல்லூரியில் கல்வி கற்பிக்கும் சில ஆசிரியர்கள் பாடசாலையில் செய்யும் சில காதல் கூத்துக்கள் குறித்து மாணவர்கள் மூலம் சில அதிர்ச்சியான தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.








ஆசிரியன்  = ஆண் பால்

ஆசிரியை = பெண் பால்
ஆசிரியர்கள் = பொதுப் பால்



ஆம், குறிப்பிட்ட சில ஆசிரியன்கள் பாடசாலைக்கு வருவது அரசாங்க சம்பளத்தில் இளம் ஆசிரியைகளுக்கு பாணி வடிப்பதற்காகவா என்று கேள்வி கேட்கப் படுகிறது.


பாடசாலையில் கல்வி கற்பிக்கும் சில இளம் ஆசிரியைகளுடன் ரொமாண்டிக் ஜோக் அடிப்பதும் பார்த்து பார்த்துப் வடிவதுமாக சில ஆசிரியன்கள் உள்ளனராம். இவையெல்லாம் சில மாணவர்கள் மூலம் கிடைத்த தகலவல்கள்.

(இளம் ஆசிரியர்கள் என்றால், திருமணம் ஆகாதவர்கள் மட்டும்தான் என்று தவறாக நினைத்துக் கொள்ள வேண்டாம்.)

அதிபர் உறுதியாக இல்லாததாலும், ஆசிரியர்களுக்கு கட்டுப் பாடுகள் இல்லாததாலும், இந்த கூத்துக்கள் மறைவிலும், பகிரங்கமாகவும் நடைபெறுவதை மாணவர்கள் உறுதி செய்துள்ளனர்.


சில ஆசிரியன்கள், தாம் செய்யும் காதல் கூத்துக்களும், பேசும் காதல் காம ரசம் கலந்த வார்த்தைகளும் சின்ன வகுப்பு மாணவர்களுக்கு தெரியாது என்று நினைத்துக் கொண்டு, தமது டெலண்டை காட்டப் பார்க்கின்றனர்.


பிஞ்சிலே பழுத்த மாணவர்களுக்கு இதெல்லாம் தெரியாமல் இருக்குமா? "நாங்க எதோ ஒரு மரியாதைக்காக ஒன்றும் தெரியாதது போல இருந்தால், இந்த ஆசிரியன்கள் எங்களை தோது என்று நினைக்கின்றார்களா, அல்லது, அவர்களுக்கு மட்டும்தான் இதெல்லாம் தெரியும் என்று நினைக்கின்றார்களா?" என்று மாணவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.


 இவர்கள் சீரியஸ் லவ் என்று இல்லாவிட்டாலும், ஆசிரியர்களின் இந்த கூத்துக்கள் மாணவர்களின் ஒழுக்கம் கல்வி போன்ற அனைத்தையும் பாதிக்கும் என்பது நிச்சயம்.


மாணவர்களிடமிருந்து, சம்மந்தப்பட்ட ஆசிரியர்களின் பெயர், ஊர், இனம், மதம் போன்ற விடயங்கள், மேலதிக ரொமாண்டிக் விடயங்கள் கூட எங்களுக்குக் கிடைத்துள்ளன. என்றாலும் மாணவர்களினதும், பாடசாலையினதும் நலன் கருதியும், கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப் படக் கூடாது என்பதனாலும், தனிப்பட்டவர்களின் மான மரியாதை, குடும்ப வாழ்க்கை கருதியும் இப்பொழுது அவற்றை பிரசுரிக்க வில்லை.

முக்கிய விடயம் : பாடசாலைக்கு உள்ளே நமது செய்தியாளர்கள் யாருமே இல்லை. இவை சில மாணவர்கள் மூலம் பெறப்பட்ட தகவல்களே. தற்பொழுது இவை மட்டுமே எமக்கு கிடைத்துள்ளன. மேலதிகமாக உண்மையான தகவல்கள் கிடைத்தால், அவற்றையும் பகிரங்கப் படுத்துவோம்.




(இந்த கூத்துக்களில் எல்லா ஆசிரியர்களும் சம்மந்தம் இல்லை, குறிப்பிட்ட சில ஆசிரியர்கள் மட்டுமே சம்மந்தம் என்று சொல்லப் படுகின்றது.)




இவை குறித்து மேலதிக தகவல்கள் தெரிந்தவர்கள் எமக்கு தெரிவிக்கலாம். அதே போல, இதில் மாற்றுக் கருத்து இருந்தால் பாடசாலை நிர்வாகம்/ அதிபர் எமக்கு தெரிவித்தல், அதனையும் பிரசுரிக்க நாம் தயாராக உள்ளோம்.    mawanellanews@live.com


நிர்வாக
ம்

மாவனல்லை செய்திகள்










No comments:

Post a Comment

Popular Posts